மேற்கு வங்கத் தேர்தலின் நான்காவது கட்ட பரப்புரையில் பாஜகவுக்கு எதிராக கடுமையாகப் பேசிய மம்தா பானர்ஜி, நான் பாஜகவின் தாக்குதல்களுக்கு வளைந்து கொடுக்காத 'வங்கத்து பெண் புலி' என்று கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி " பாஜகவினர் அசாமில் இருந்து குண்டர்களைக் கொண்டுவந்து, வெடிகுண்டுகளை வெடித்து மக்களை அச்சுறுத்துவார்கள், பயப்பட வேண்டாம். எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வாக்களிப்பதை மத்திய படைகள் தடுக்கின்றன. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அவர்கள் அசாமைப் போல இங்கும் தடுப்பு முகாம்களைக் கட்டுவார்கள் “ என்று கூறினார்.
மேலும், "அவர்கள் 14 லட்சம் வங்காளர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. நாங்கள் அந்த ஏழை மக்களுக்காக போராடுகிறோம், அவர்கள் வாக்களிக்கவில்லை. பாஜகவின் பணத்தால் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் ஒரு வங்காள பெண் புலி, நான் உடைந்துபோவேன், ஆனால் ஒருபோதும் பாஜகவுக்கு வளைந்துகொடுக்கமாட்டேன்" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் "குஜராத்திகள் வங்காளத்தை கைப்பற்றுவதை தடுக்கவேண்டும் என்றால், திரிணாமுல் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும், எங்களுக்கு பாஜக தேவையில்லை. வங்காளம் வங்காளத்தவரிடமே இருக்கும், குஜராத்தில் இருந்து வந்த குண்டர்கள் வங்காளத்தை கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி