அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக வளர்த்துவந்த தனது நகத்தை வெட்டிக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கின்னஸ் உலக சாதனை பக்கத்தை பின்பற்றுபவர்கள் உலகளவில் பலவிதமான சாதனைகளைப் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சற்று வித்தியாசமானது. உலகிலேயே மிக நீளமான கைவிரல் நகங்களைகளைக் கொண்ட பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக தான் ஆசையாக வளர்த்து பராமரித்து வந்த அந்த நகங்களை வெட்டியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்துவரும் அயன்னா வில்லியம்ஸ் என்ற பெண் 28 வருடங்களுக்கும் மேலாக தனது கைநகங்களை வெட்டாமல் உடையாமல் பராமரித்து வந்துள்ளார். தற்போது டாக்டர் ஆலிசன் என்ற சரும பராமரிப்பு நிபுணரிடம் சென்று தனது நகங்களை ஒரு எலக்ட்ரிக் மெஷினால் வெட்டி எடுத்துள்ளார்.
அயன்னாவின் நகம் மற்றும், வெட்டுவதற்கு முன், பின் ஆகிய படங்களை கின்னஸ் உலக சாதனை பக்கம் பகிர்ந்துள்ளது. அயன்னாவின் நகங்களின் நீளம் கிட்டத்தட்ட 733.55 செ.மீ என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 24.7 அடி என கணக்கிடப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ