‘விஜய் 65’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றடைந்தார் நடிகர் விஜய். ஜார்ஜியாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
'மாஸ்டர்' பட வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பட பூஜை கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களித்தவுடன் விஜய் 16 நாட்கள் படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு ஜார்ஜியா புறப்பட்டார். ‘விஜய் 65’ படக்குழுவினர், ஏற்கெனவே அங்கு சென்று அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா செல்லவிருக்கிறார்.
இந்நிலையில், விஜய் ஜார்ஜியா சென்றடைந்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் விஜய்க்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்கிறார்கள். மேலும், விஜய்யின் ஃபேவரைட் காஸ்டியூம் டிசைனரும் ’மாஸ்டர்’ படத்தின் காஸ்டியூம் டிசைனரான பல்லவி சிங்கும் ஜார்ஜியா சென்றுள்ளார். அவரது இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வைத்து வருகிறார்.
Loading More post
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
+2 பொதுத்தேர்வு அட்டவணை 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் – தேர்வுகள் இயக்ககம்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து!
டெல்லியில் ஒருவாரம் முழு ஊரடங்கு: மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி