[X] Close >

ஐபிஎல் 2021: ஆர்சிபி vs மும்பை இண்டியன்ஸ் நேருக்கு நேர் இதுவரை!

IPL-2021-Season-First-Match-Between-RCB-versus-Mumbai-Indians-and-the-two-team-Head-to-head-stats

14வது ஐபிஎல் சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெற உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. மும்பையை ரோகித் ஷர்மாவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விராட் கோலியும் வழிநடத்துகின்றனர். இந்த இரு அணிகளுக்கும் இதுவரை கடந்த சீசன்களில் நடைபெற்ற 29 போட்டிகளில் 19 முறை மும்பையும், 10 முறை பெங்களூருவும் வென்றுள்ளன. 


Advertisement

கடந்த 2020 சீசனில் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்திருந்தன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி 26 போட்டிகளில் 637 ரன்களை குவித்துள்ளார். அதே போல அதிகபட்சமாக 19 விக்கெட்டை அந்த அணியின் வீரர் சாஹல் வீழ்த்தியுள்ளார். அவருடன் மும்பை அணியின் வீரர் பும்ரா விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 

வழக்கமாக தொடரின் முதல் போட்டியை பெரும்பாலும் மும்பை அணி இழக்கும். அப்படி தான் அந்த அணியின் புள்ளி விவரங்கள் உள்ளன. அதனால் முதல் போட்டியில் பெங்களூரு வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். அதனால் நாளைய ஆட்டத்தை பொறுத்தவரை சுழற் பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close