கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்றுமுதல் கூடுதலாக ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
கா்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், வடகிழக்கு, வடமேற்கு கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்கள், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் ஊழியா்கள் தங்களை அரசு ஊழியா்களாகத் தரம் உயர்த்த வேண்டும்; 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் முதல்நாள் போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்தால் நிலைமை மோசமாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில் வரும் 13-ம் தேதி கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினமான 'யுகாதி பண்டிகை கொண்டாடவிருப்பதால், நெருக்கடியை சமாளிக்க இன்று (ஏப்ரல் 8) முதல் ஏப்ரல் 14 வரை கூடுதல் ரயில்களை இயக்கவுள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஊழியா்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். இல்லையெனில் 'எஸ்மா' சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.
Loading More post
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குவியும் நோயாளிகள் - நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ