உசைன் போல்டின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு விராட் கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் கமெண்ட் செய்துள்ளனர்.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தைய வீரரும், 8 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜமைக்கா நாட்டை சார்ந்த உசைன் போல்ட், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகிய இருவரையும் டேக் செய்து, ‘சேலஞ்சர்ஸ் உங்களுக்கு நான் ஒன்றை தெரியப்படுத்துக்கிறேன். நான் இன்னமும் வேகமான பூனையாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார். உசைன் போல்டின் இந்தப் பதிவுக்கு விராட் கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் கமெண்ட் செய்துள்ளனர். இதுகுறித்து கோலி பதிவிடுகையில், "எந்த சந்தேகமும் இல்லை, அதனால்தான் உங்களை இப்போது எங்கள் அணியில் சேர்த்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார். டிவில்லியர்ஸ் கூறுகையில், 'சில கூடுதல் ரன்கள் தேவைப்படும்போது யாரை அழைப்பது என்பது எங்களுக்குத் தெரியும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Loading More post
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
‘பரிசோதனை இல்லை, மருந்து இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, ஆனால் 3408 கோடிக்கு டெண்டர்’ - ராகுல்
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்த ஒப்புதல்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை