குளிர் சாதன இயந்திரங்கள், எல்இடி விளக்குகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் குளிர்சாதன இயந்திரங்கள், எல்இடி விளக்குகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் தரும் வகையிலான 6,238 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டது. இம்முடிவால் அடுத்த 5 ஆண்டுகளில் குளிர்சாதன இயந்திர உற்பத்தி மற்றும் எல்இடி விளக்குகள் உற்பத்தியில் 7 ஆயிரத்து 920 கோடி ரூபாய் கூடுதலாக முதலீடு செய்யப்படும் என்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூடுதலாக 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.
இது தவிர சூரிய ஒளி மின்னுற்பத்தி சாதனங்கள் தயாரிப்புக்கும் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் வேலைகள் உருவாகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களை சர்வதேச சந்தையில் போட்டியிட வைப்பதற்காக உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு அண்மைக்காலமாக செயல்படுத்தி வருகிறது. அத்திட்டம் ஒவ்வொரு துறையாக விரிவாக்கப்பட்டு வருகிறது
Loading More post
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
‘பரிசோதனை இல்லை, மருந்து இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, ஆனால் 3408 கோடிக்கு டெண்டர்’ - ராகுல்
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்த ஒப்புதல்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!