பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தம் உள்ள வாக்குகளை விட 50 வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளதால், அந்த பூத்தில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூம்புகார் தொகுதியில் உள்ள திருவாவடுதுறை அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 175 ஆம் எண் வாக்குச்சாவடியில் மொத்தம் 578 வாக்குகள் உள்ளன. ஆனால் 50 வாக்குகள் கூடுதலாக 628 வாக்குகள் பதிவாயின. இதுபற்றி சந்தேகம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், நேற்று விடிய விடிய போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர்.
பின்னர் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்க முயற்சித்தபோது மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த பூத்தில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட வேட்பாளர்களின் முகவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை