’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடித்துவரும் பிரஷாந்தும் நடிகை சிம்ரனும் தங்கள் பிறந்தநாளை ஷூட்டிங்கில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
’தமிழ்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘ஜோடி’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ பட வெற்றிக் கூட்டணி பிரஷாந்த் - சிம்ரன் ஜோடி 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்கள். கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்த 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில்தான் இந்த ஜோடி இணைந்திருக்கிறது இப்படத்தை பிரஷாந்த்தின் அப்பா தியாகராஜன் இயக்குகிறார். நடிகை பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்தியில் ‘அந்தாதூன்’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் தபு அசத்தலான நடிப்பால் மிரட்டியிருந்தார். அவரது கதாபாத்திரத்தில்தான், தமிழில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே, ’பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைக் குவித்தார் சிம்ரன். இக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
கடந்த மாதம் முதல் ‘அந்தகன்’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், சிம்ரன் மற்றும் பிரஷாந்த்தின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கிறது படக்குழு. ஏப்ரல் 4 ஆம் தேதி சிம்ரன், ஏப்ரல் 6 ஆம் தேதி பிரஷாந்த் என இவர்களின் பிறந்த நாட்கள் அடுத்தடுத்து வந்ததையொட்டி இருவருக்கும் கேக் வெட்டி வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறது படக்குழு. அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
பிரஷாந்த்தின் அப்பா தியாகராஜன், நடிகை வனிதா விஜயகுமார், சமுத்திர கனி, மனோ பாலா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
Loading More post
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் இல்லாததே காரணமென கொதிக்கும் உறவினர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்