யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.
’மாமனிதன்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதி - சீனுராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தினை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இளையராஜவும், யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இந்தப் படத்திற்கு சேர்ந்து இசையமைக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக படத்தை வெளியிடாமல் இருக்கிறது படக்குழு.
தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படமான ‘மாமனிதன்’ படத்தின் முதல் பாடலை 7 ஆம் தேதி வெளியிடுகிறோம். அப்பாவிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஒரு இசை விருந்து காத்திருக்கிறது” என்று பெருமையுடன் கடந்தவாரம் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது ‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக் கதவை’ பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். யுவன் ஷங்கராஜா உடன் நிற்க இசைஞானி இளையராஜா பாடும் ’ தட்டிப்புட்டா’ பாடல் மெலடி ரகம். ’இளையராஜாவின் 80 கால பாடல்களை நினைவுப்படுத்தும் பாடல்போல் மனதை வருடுகிறத என்று கருத்திட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வெற்றியும் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது வீடியோ வடிவில் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், விஜய்சேதுபதி, காயத்ரி இடையிலான காட்சிகள் படமாக்குவது போல் காட்சிகள் உள்ளன. இதுவொரு குடும்பக் கதை என்பதை இந்த காட்சிகள் காட்டுகின்றன. இதில் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!