[X] Close >

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு

5-o-clock-situation-in-Tamil-Nadu-63-65--turnouts

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.


Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 53.59 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சென்னையில் 55.31% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 50.05%வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

image


Advertisement

இரவு 7 மணிவரை அனைவரும் வாக்களிக்கலாம். சாதாரண வாக்காளர்கள் வாக்களித்தப்பின் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம். கொரோனா நோயாளிகள் வாக்களிக்கும் முன் பிபிஇ பாதுகாப்பு உடை அணிய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close