சோழவந்தான் தொகுதியில் அதிமுகவினர் வழங்கிய டோக்கன்களை மக்கள் கிழித்து சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவுக்கு பின்னர் ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறி, டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மக்கள் மாணிக்கம் தரப்பில் வழங்கப்பட்ட டோக்கன்களை கிழித்து சாலையில் வீசியதாகத் தெரிகிறது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர்
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி