தமிழகத்தில் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கை என்ன? வாக்காளர்கள் எவ்வாறு தயார்படுத்திக்கொண்டு வரலாம்? இதுகுறித்து ஆலோசனை வழங்குகிறார்கள் துறை வல்லுநர்கள்.
“ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் பெரும்பாலும், மே மாதத்தில்தான் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களோடு இணைத்து தேர்தல் நடத்தினாலும் தமிழகம், கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் மே மாதம் என்பது வேனிற் காலம். அனல் பறக்கும் பிரச்சாரம் அனல் பறக்கும் வெயிலில் தான் நடந்து வந்துள்ளது. ஆனால் இந்த முறை கொரோனா போன்ற காரணங்களால் முன்னதாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
பொதுவாக ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 32 லிருந்து 36 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் நிலையில், தற்போது 36 லிருந்து 42 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. தேர்தல் தேதியான நாளையும் பெரும்பாலான இடங்களில் 4 டிகிரி வரை வெயில் அதிகமாக பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசனிடம் கேட்டபோது,
“தமிழகத்தில் பொதுவாக மே மாதத்தில் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகும் ஆனால் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றத்தால் மார்ச் மாதம் இறுதியிலேயே வெப்பநிலை அதிகரிக்க தொடங்குகிறது. இந்த வருடம் ஏப்ரல் 2ம் தேதி அதிக பட்ச வெப்பநிலையாக 43 டிகிரி வரை பதிவானது. வடமேற்கு திசையில் இருந்து தெற்கு கர்நாடகா வழியாக வரும் அனல் காற்றால் தற்போது வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அதனால் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 80 % வரை உயர்கிறது. எனவேதான் அதிக சூட்டை உணர்கிறேன்.
அதிக வியர்வை வெளியேறுகிறது. இந்த சீதோஷ்ண நிலை அடுத்தவாரம் வரை நீடிக்கும். அதற்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் பதிவாகும் சாரசரி வெப்பநிலையான 34 முதல் 40 டிகிரி வரை பதிவாகும். நாளை, நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களுக்கு திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். 11 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்” என்று தெரிவித்தார் புவியரசன்.
மருத்துவர் உத்ரா பேசும்போது, ”வாக்குப்பதிவு நாளில் வெப்பநிலை உயர்வையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 88,937 வாக்குசாவடிகளில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில்தான் உள்ளது. எனவே குறைந்தபட்சம் 2 கிலோமீட்டர் பயணித்து வாக்களிக்கும் நிலையில் வாக்காளர்கள் உள்ளனர். எனவே காத்திருந்து வாக்களிக்கும் வாக்களர்களுக்கு நிழற் குடைகள், தண்ணீர் பந்தல்கள் ஏற்படுத்தி தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகிறது.
அதே நேரத்தில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் குடை, கைக்குட்டை, தண்ணீர் பாட்டில் எடுத்து வரலாம் என கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் உத்ரா. அதே போல தேர்தல் ஆணையம் சார்பில் நீர் மோர், மண்பானை குடிநீர், நிழற் பந்தல் அமைத்து தருவதும் வெப்பநிலை நிலையில் இருந்து தணிக்க உதவும்” என்கிறார்.
- ந.பால வெற்றிவேல்
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்