[X] Close >

உலகளவில் மொபைல் போன் வணிகத்தை நிறுத்திய எல்ஜி நிறுவனம் - காரணம் என்ன?

LG-shutting-down-its-mobile-phone-business-worldwide-

உலகளவில் எல்ஜி நிறுவனம் தனது மொபைல் போன் வணிகத்தை ஜூலை 31 ஆம் தேதிக்குள் நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.


Advertisement

தென் கொரிய நிறுவனமான எல்ஜி மொபைல் போன் துறையை "நம்பமுடியாத போட்டி" என்று கூறியதுடன், வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தனது மொபைல் போன் வர்த்தகத்தை முழுவதுமாக நிறுத்துவதாகவும் அறிவித்திருக்கிறது. மொபைல் போன் வணிகத்தை நிறுத்தினாலும், தொடர்ந்து எல்ஜி நிறுவனம் மின்சார வாகன பாகங்கள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், ரோபாட்டிக்ஸ் கருவிகள், செயற்கை நுண்ணறிவு பொருட்கள், பி 2 பி தீர்வுகள் மற்றும் 6 ஜி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என தெரிவித்திருக்கிறது.

எல்ஜி நிறுவனம் தற்போதுள்ள மொபைல் தயாரிப்புகளின் வாடிக்கையாளர்களுக்கான சேவை மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகளை குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும் எனவும், வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் அந்தந்த பகுதிகளுக்கேற்ப தீர்மானிக்கப்படும் என எல்ஜி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.


Advertisement

எல்.ஜி மொபைல் போனின் வர்த்தகம் கடந்த 6 ஆண்டுகளில் 4.5 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டத்தை சந்தித்த நிலையில் இந்த முடிவினை எடுத்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close