விக்ரம் பிரபு - வாணி போஜன் நடித்துள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி’ பாண்டி படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கியது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் கார்த்திக் செளத்ரி இயக்க, மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதியாரின் கவிதை வரிகளான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்று டைட்டில் வைத்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பின. இப்படத்தின் மோஷன் போஸ்டர் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி