உத்தரபிரதேசத்தில் சகோதரிகள் இருவரை குச்சியால் அடித்த குற்றத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அதேநாளில் பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் எத்தாவா நகரத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்கப்பட்ட பெண்கள் இருவரும் 19 வயது மற்றும் 22 வயது சகோதரிகள் என தெரியவந்துள்ளது. இரண்டு பெண்களும் மார்க்கெட்டிலிருந்து சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது 20 வயதான யெரும், 22 வயதான அக்ரம் ஆகிய இரண்டுபேரும் தகாத வார்த்தைகளால் பேசியபடி பின்னால் வந்திருக்கின்றனர். தங்களைத்தான் இருவரும் தகாத வார்த்தைகளால் பேசுவதாக நினைத்த சகோதரிகள் இருவரும் அவர்களிடம் சண்டையிட்டுள்ளனர். மேலும் தங்கள் சகோதரனையும் சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளனர்.
இருதரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருக்கும்போதே இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்த குச்சியை எடுத்து ஒரு பெண்ணை பலமாக அடித்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் கண்ணுக்கு அருகே பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. நிஷா பெனோ என்ற அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே ரத்தம் வழிய வழிய வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைபெற்று வீடு திரும்பியபிறகு காவல் நிலையத்துக்குச் சென்று இதுகுறித்து புகார் கொடுத்துள்ளனர். இதனால் அந்த இளைஞர்கள் இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் இருவரும் அதேநாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்