இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘பாகுபலி’ படத்தின் மூலம் புகழடைந்த நடிகர் பிரபாஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அடுத்ததாக, ’கேஜிஎஃப்’ புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இக்கும் ‘சலார்’ படத்தில் பிரபாஸ் நடிப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. பிரஷாந்த் நீல் கர்நாடக சினிமா இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி வெற்றிக்குப்பிறகு பிரபாஸ் அனைத்து மொழிகளிலும் பிரபலமான இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனது அடுத்தப் படத்தை தமிழின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் அதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’, ‘கைதி’ பட வெற்றிக்குப் பிறகு விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியிருந்தார். கொரோனா சூழலில் வெளியான படங்களில் ‘மாஸ்டர்’ சூப்பர் ஹிட் அடித்ததோடு வசூல் சாதனை செய்தது. தற்போது இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
’மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். பிரபாஸ்-லோகேஷ் கனகராஜ் படம் அடுத்த வருடம் மே மாதம் முதல் தொடங்குவதோடு பாகுபலியை போலவே பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!