"நான் பெரிய பவர் ஹிட்டர் எல்லாம் இல்லை. ஆனால் கோலி, ரோகித் போல பந்தை டைம் செய்ய கற்றுக் கொள்கிறேன்" என்று புஜாரா கூறியுள்ளார்.
“நான் ஒன்றும் பெரிய பவர் ஹிட்டர் எல்லாம் இல்லை. அதற்கு எனது ஸ்ட்ரைக் ரேட் தான் உதாரணம். அதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். இருந்தாலும் அதே சமயத்தில் நான் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இதில் ரோகித் பெரிய பவர் ஹிட்டர் எல்லாம் இல்லை. பந்தை சரியாக கணித்து அதற்கு ஏற்ற படிஷார்டர் பார்மேட் கிரிக்கெட்டில் டைம் செய்கிறார்” என தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் புஜாரா.
தொடர்ந்து பேசிய அவர் “அதே போல கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் மாதிரயான வீரர்கள் அக்மார்க் கிரிக்கெட் ஷாட்களை தான் விளையாடுகிறார்கள். அதே நேரத்தில் புதுவிதமான ஷாட்களையும் விளையாடுகிறார்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
எனக்கும் புதுவிதமான ஷாட் ஆட வேண்டுமென்ற மைண்ட் செட் உள்ளது. அதன் மூலம் சாதிக்க விரும்புகிறேன். இருந்தாலும் எது நமது பலமோ அதில் நிலையாக நின்று விளையாடுவது ஒவ்வொரு வீரருக்குமான உத்வேகம்.
Pujara - The Wall in Yellove ??#WhistlePodu | @ChennaiIPL pic.twitter.com/MGeNalJr0x — CSK Fans Army™ (@CSKFansArmy) April 3, 2021
தொடக்கத்தில் டி20 போட்டிகளில் விளையாடுவாதல் எனது டெஸ்ட் ஆட்டம் பாதிக்குமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எது எனது பலமோ அது அப்படியே தான் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் அடிப்படை விலையான 50 லட்ச ரூபாய்க்கு புஜாரா சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
படம் நன்றி : CSK
Loading More post
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ