தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இறுதி வரை வெற்றிக்காக போராடி வீழ்ந்தது பாகிஸ்தான்.
50 ஓவர்களில் 324 ரன்களை 9 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி குவிந்திருந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாக்கர் ஜாமன் 155 பந்துகளில் 193 ரன்களை குவித்திருந்தார். அதன் மூலம் இரண்டாவதாக பேட் செய்து அதிக ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அவர்.
? Fakhar Zaman played an extraordinary innings. I wasn't expecting this kind of onslaught from him. Probably the best innings I have come across: Temba Bavuma#SAvPAK | #HarHaalMainCricket | #BackTheBoysInGreen pic.twitter.com/VmnsUPybY4
— Pakistan Cricket (@TheRealPCB) April 4, 2021Advertisement
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 185 (நாட் அவுட்), தோனி 183 (நாட் அவுட்), கோலி 183 ரன்களை இரண்டாவதாக பேட் செய்த போது ரன்களை குவித்துள்ளனர். இருப்பினும் பாக்கரின் போராட்டம் வீணானது. கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் பாக்கர் தான் இருந்தார். அந்த ஓவரில் முதல் பந்தை லாங் ஆப் திசைக்கு விரட்டி இரண்டு ரன்கள் எடுக்க முயன்றார். அப்போது பந்தை பீல்டர் மார்க்ரம் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு அடித்த அபாரமான த்ரோவினால் ரன் அவுட் ஆனார். அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் டி காக் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் பந்தை பிடிக்குமாறு பவுலருக்கு சொன்னது போல இருந்தது. அதனால் வட்டத்தில் தனது வேகத்தை குறைத்த பாக்கர் பின்பக்கமாக திரும்பி பார்த்தார். ஆனால் பந்து ஸ்ட்ரைக்கர் எண்டில் த்ரோ செய்யபபட்டதை பின்னர் தான் அறிந்தார். டி காக்கின் இந்த யுக்தி தான் தற்போது விவதாமகியுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் ‘இது கேம் ஸ்பிரிட்டை குலைக்கும் செயல்’ என சொல்லி ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்துகிறார்.
Quinton de Kock was just being loyal to his #IPL captain Rohit Sharma?
Fakhar Zaman run out on 193!#SAvPAK #QuintondeKock#MumbaiIndians pic.twitter.com/yWjxaZAVz4— ??Abhinav Chauhan (@iamabhi_0310) April 5, 2021Advertisement
இதே போல பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். "அதில் டி காக்கை குறியாய் சொல்ல ஒன்றும் இல்லை. அது எனது தவறு" என சொல்லி உள்ளார் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பாக்கர் ஜாமன்.
Loading More post
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ