ஒடிசாவில் போதிய வரதட்சணை தராத மருமகளை நிர்வாணமாக்கி, மாமியார் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மாமியாரை காவல்துறை தேடி வருகிறது.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் 24 வயது பெண் ஒருவர், போதுமான வரதட்சணை வழங்காத காரணத்தால் மாமியாரால் நிர்வாணமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சூழலில், இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நிகிராய் காவல் நிலைய ஆய்வாளர் காபுலி பாரிக் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது, குற்றம்சாட்டப்பட்ட மாமியார் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!