[X] Close >

தமிழகத்தில் 3ஆவது நாளாக 3 ஆயிரத்தை கடந்த கொரோனா

Corona-crossed-3-thousand-on-the-3rd-day-in-Tamil-Nadu

தமிழகத்தில் மூன்றாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.


Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் 3,581 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 99 ஆயிரத்து 807ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆயிரத்து 813 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 65ஆயிரத்து 71 ஆக உள்ளது.

image


Advertisement

கொரோனாவுக்கு ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 12ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 344 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 315 பேருக்கும், செங்கல்பட்டில் 297 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close