[X] Close >

குஜராத்: மாஸ்க் அணியாதவர்கள், சாலையில் எச்சில் துப்பியவர்களிடம் ரூ.161 கோடி அபராதம் வசூல்

Gujarat-Police-Collected-161-Crores-from-Offender-who-would-not-wear-Mask-and-Spitting-in-Public-places-by-Gujarat-State-Police

குஜராத் மாநிலத்தில் மாஸ்க் அணியாதவர்கள் மற்றும் சாலையில் எச்சில் துப்பியவர்களிடம் இருந்து 161 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது அந்த மாநில காவல்துறை. கடந்த 2020 மே 30 முதல் 2021 ஏப்ரல் 1 வரையிலான கால கட்டத்தில் இந்த அபராத தொகை அரசு அறிவித்த வழிகாட்டு நடைமுறைகளை மதிக்காத பொது மக்களிடமிருந்து வசூலிக்க பட்டுள்ளது. சுமார் 33 மாவட்டங்களை சேர்ந்த 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து இந்த அபராத தொகை வசூலிக்க பட்டுள்ளது. 


Advertisement

“அரசு அமல்படுத்திய விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்ற நோக்கில் விதிமுறைகளை மீறிய மக்களிடமிருந்து மட்டும் தான் இந்த அபராத தொகை வசூல் செய்துள்ளோம்” என எஸ். பி கவுரவ் ஜசானி தெரிவித்துள்ளார். 

image


Advertisement

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றினால் பதிக்கபட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒருநாள் மட்டுமே 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close