காயத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுவிட்டதன் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணியில் ஜடேஜா இடம் பெறுவார் என கூறப்படுகிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் டெல்லி அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்த முதல் போட்டியிலேயே ஜடேஜா களமிறக்கப்படுவார் என சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தியாவுக்காக ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று விதமான பாரமேட் கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல் ஏரியாவிலும் ஜடேஜா கில்லி.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியின் இடம்பெற்றிருந்த ஜடேஜா டெஸ்ட் தொடரின் போது விரலில் ஏற்பட்ட காயத்தினால் அந்த தொடரிலிருந்து விலகினார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சையும் அளிக்கபட்டது. இந்த காயத்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் இணைந்த ஜடேஜா தனது பயிற்சியை தொடங்கினார்.
இந்நிலையில், டைம்ஸ் நவ் ஊடகத்துக்கு பேசியுள்ள சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் "ஜடேஜா காயத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுவிட்டார். வலைப்பயிற்சியில் பவுலிங், பேட்டிங் என சிறப்பாக செயல்பட்டார். அதனால் டெல்லி அணியுடனான முதல் போட்டியில் ஜடேஜா நிச்சயம் இடம் பிடிப்பார்" என கூறியுள்ளார்.
Loading More post
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ