தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பல்வேறு இடங்களில் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் பதுக்கிவைக்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதையொட்டி, இன்று முதல் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாரைசாரையாக படையெடுத்த மதுக்குடிப்போர், மது வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான தனிமனித இடைவெளி இல்லாததோடு, முகக்கவசமும் அணியாமல் அவர்கள் மதுவாங்குவதற்காக ஒருவரை ஒருவர் முந்தியடித்தனர். கடலூரில் இரவு கடை மூடும் வரை கூட்டம் அலைமோதியது. காவல்துறையினரின் பாதுகாப்புடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இரவு 10 மணியை தாண்டியும் மதுக்குடிப்போர் கடைகளில் குவிந்த நிலையில், கடையை மூடச்செய்து, அவர்களை அங்கிருந்து காவல்துறையினர் கலைந்து போகச் செய்தனர். திருவையாறு பகுதியில், வழக்கமான விற்பனையைவிட ஒருமடங்கு மதுப்பாட்டில்கள் விற்பனையாகின.
ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 குவார்ட்டர் பாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குருசாமி, ராமர் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் கணேசன் என்பவரை தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்திலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் வடுகபாளையம் என்ற இடத்தில் மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய சோதனையில், காரில் கடத்திவரப்பட்ட 480 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல வேலூரில் 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் 4 பேரை கைது செய்தனர்.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்