தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொல்லி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார் கிரிக்கெட் வீரர் நடராஜன்.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய நடராஜன் வெற்றிக் களிப்புடன், சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு சென்றுள்ளார். சென்ற கையோடு மஹிந்திரா நிறுவனம் தனக்கு பரிசளித்த ‘தார்’காரை தனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷுக்கு பேரன்போடு பரிசளித்து நெகிழ்ச்சியூட்டினார். பின்னர், தனது மனைவி மற்றும் மகள், நண்பர்களுடன் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பிரபல சுற்றுலாத் தலமான கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களும் சாகசங்களும்தான்” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு நாள் தொடரில் வெற்றிக்கு பிறகு கேப்டன் கோலி நடராஜனை ஆரத்தழுவி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ