அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபின் ரத்த உறைவு பிரச்னையால் பாதிக்கப்பட்ட 30 பேரில் 7 பேர் உயிரிழந்ததாக, இங்கிலாந்தின் மருந்துவ ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், மார்ச் 24-ஆம் தேதி வரை ரத்த உறைவால் 30 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஏழு பேர் உயிரிழந்ததாக இங்கிலாந்து மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
பல ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பக்கவிளைவுகளை உருவாக்குவதாக தடைவிதித்திருக்கும் சூழலில், இங்கிலாந்திலும் இந்தத் தடுப்பூசி காரணமாக இறப்புகள் பதிவாகியிருக்கிறது.
அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பாதுகாப்பானது என்று முன்பு அறிவித்த ஐரோப்பிய மருந்துகள் ஆணையம், ஏப்ரல் 7 ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பாதுகாப்பானது, ஆனால் வயது, பாலினம் மற்றும் இணைநோய்கள் போன்ற குறிப்பிட்ட ஆபத்து காரணிகளை பற்றி வல்லுநர்கள் கண்டுபிடிக்கவில்லை என்றும் ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் கூறியுள்ளது.
இலங்கிலாந்தில் 18.1 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், இந்த 30 பேர் ரத்த உறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வந்ததாக இங்கிலாந்து மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்தது. ஆனால், ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு போன்ற எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனகா மற்றும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் இரண்டையும் பயன்படுத்தி இங்கிலாந்தில் இதுவரை 31 மில்லியனுக்கும் அதிகமான முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
Loading More post
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ