மயிலாடுதுறை அருகே நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவரின் மகன் அரவிந்த்குமார் என்கிற ராம்குமார் (18). இவர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருக்கும் இளம்பெண்ணை (19) பலநாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 31-ஆம் தேதி இரவு அந்த பெண் தன் வீட்டிலிருந்து உறவினர் வீட்டு திருமணத்திற்கு தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது அரவிந்த்குமார் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று அவரது வாயை பொத்தி மிரட்டிய அருகில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட பெண் தன் சகோதரியிடம் நடந்த சம்பவத்தைக்கூறி அழுதுள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் சகோதரி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அரவிந்த்குமார் என்கிற ராம்குமார் (18) மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி