பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஏர்வாடியில் கைது

Pakistani-Arrested-in-Rameshwaram

அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வரவுள்ள நிலையில், அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

ஏர்வாடி தர்காவிற்கு வந்த 67 வயது முதியவர் ஒருவர், தனியார் விடுதியில் சில நாட்களுக்கு முன் அறை எடுத்து தங்கினார். 2 நாட்களாக அறையை விட்டு அவர் வெளியே வாரததால், சந்தேகம் அடைந்த தங்கு விடுதி ஊழியர்கள் ஏர்வாடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் அந்த முதியவர், தான் இலங்கையிலிருந்து, ஏர்வாடி தர்காவிற்கு வந்ததாகக் கூறியுள்ளார். முன்னுக்குபின் முரணான தகவல்களைக் கூறியதால், 2 நாட்களாக அவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், அந்த முதியவர் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement