'இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியுடனான பயணத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். இம்முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
‘’இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியுடனான பயணத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றாக விளையாட வேண்டும், களத்தில் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். நான் 20 வயது வீரர் கிடையாது. அதனால் முன்பு போல் பயிற்சியில் ஈடுபட முடியாது. ஆனாலும் ஒரு 40 வயது வீரராக நான் முழு உடற்தகுதியுடன் இருப்பதை அறிவேன். இந்த லெவனில் சாதிப்பதற்கு என்ன தேவையோ அதை நிச்சயம் செய்வேன்.
புள்ளிகள் பட்டியலில் அணி முன்னேற 100 சதவிகிதத்திற்கும் மேலான எனது சிறப்பான பங்களிப்பை வழங்க முயற்சிப்பேன். ஒவ்வொரு சீசன் முடிந்ததும் தொடர்ந்து விளையாட முடியுமா முடியாதா? என்று சுயபரிசோதனை செய்து அதற்கு ஏற்ப முடிவு செய்வேன். தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதாக உணர்ந்தால் அடுத்த ஆண்டும் களத்தில் என்னை பார்க்கலாம்.
கொல்கத்தா எப்போதும் எனக்கு உந்துதலைக் தரக்கூடிய ஊர். இதற்கான காரணமான வங்காள ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொல்கத்தா எனக்கு இன்னொரு வீடு போன்றது என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்’’ என்று கூறினார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்