போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் வருகிற 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும் படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தேனி மாவட்டம் போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதிமுகவைச் சேர்ந்த தேனி மாவட்ட ஜெ. பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!