[X] Close >

புற்று நோயால் பாதிக்கப்பட்டு நாக்கினை இழந்த ஆட்டோ டிரைவருக்கு புதிய நாக்கு! எப்படி?

Doctors-help-to-a-Cancer-Patient-who-was-an-Auto-Driver-to-reconstruct-new-tongue-in-Bengaluru-city-Karnataka-State-India

புற்று நோயினால் நாக்கினை இழந்த பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு புதிய நாக்கு கிடைத்துள்ளது.


Advertisement

நகரப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் 53 வயதான அவருக்கு கடந்த 2 மாதங்களாகவே நாக்கில் அல்சர் இருந்துள்ளது. தொடக்கத்தில் நாட்டுவைத்தியம் செய்து பார்த்த அவர், நண்பரின் பரிந்துரையை ஏற்று புற்று நோய் சிறப்பு மருத்துவரை அணுகியுள்ளார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவரது நாக்கு பகுதியில் புற்று நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிந்துள்ளார். தொடர்ந்து அவரது 75 சதவிகித வலது பக்க நாக்கை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர் அகற்றியுள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு அந்த அதிசயம் நடந்துள்ளது. 

தொடர்ந்து அவருக்கு மீண்டும் கடந்த மார்ச் 5 ஆம் தேதியன்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு நாக்கினை மீண்டும் ரீ கன்ஸ்டரக்ட் செய்யும் பணியை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். அதன் மூலம் அவருக்கு நாக்கு கிடைத்துள்ளது. வழக்காமக வெளிப்புற தசைகளை கொண்டு தான் இந்த சிகிச்சையை மேற்கொள்வோம். வெளிப்புற தசைகளில் முடி வளரும் தன்மை இருப்பதால் அவரது வயிற்று பகுதியின் தசைகளை இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தி உள்ளோம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close