[X] Close >

தைவான்: உருண்டுவிழுந்த லாரியால் ரயில் தடம்புரண்டு விபத்து; 34 பயணிகள் பலி!

At-least-34-killed-dozens-injured-as-train-crashes-in-eastern-Taiwan

சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி, தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.


Advertisement

கிழக்கு தைவானின் ஹுவாலியன் வடக்குப் பகுதியில் சுமார் 350 பயணிகளுடன் சென்ற ரயில் ஒன்று, ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. 

image


Advertisement

விபத்துக்குப் பிறகு ரயிலின் முதல் 4 பெட்டிகளிலிருந்து சுமார் 80-90 பேரை மீட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் 34 பேர் உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. குகையில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதால் போகும் வழி அடைக்கப்பட்டு மீட்புப் பணிகள் கடும் சிக்கலாகியுள்ளன. எனினும்  குகைக்குள் சிக்கிய பெட்டியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த லாரி மீது மோதியதால் ரயில் தடம்புரண்டிருக்கலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close