இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் நாட்டுக்காக விளையாடாமல் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து ரசிகர் ஒருவர் அவரை விமர்சித்திருந்தார். இந்நிலையில் தன் மீதான விமர்சனத்திற்கு பதில் கொடுத்துள்ளார் ஸ்டோக்ஸ்.
அடுத்த சில நாட்களில் இந்தியாவில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ஸ்டோக்ஸ் இந்தியாவில் முகாமிட்டுள்ளார். அவரை போலவே இங்கிலாந்து அணியில் விளையாடும் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Welcome @expo2020dubai, our title sponsors for this #IPL season. Together, let's unite nations, communities and people for a better future. ?#RoyalsFamily | #Expo2020 | #Dubai pic.twitter.com/A2LLzCiyhx
— Rajasthan Royals (@rajasthanroyals) March 31, 2021Advertisement
“ஐபிஎல் தொடர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சி. ரசிகர்கள்தான் இந்த தொடரில் உயிர் நாடி. மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருப்பது அற்புதமாக இருக்கும். இந்த சீசனில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. ரசிகர்கள் மைதானம் முழுவதும் அமர்ந்திருக்க கிரிக்கெட் விளையாடுவது தனி சுகம். அதனை அண்மையில் முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் அனுபவித்து இருந்தேன்” என ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
அவரிடம் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியது குறித்தும் கேட்கப்பட்டது. “தற்போது பணத்தை தேடி சென்றிருக்கும் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு திரும்பியதும் பந்து வீச அசதியாக இருக்கிறது எனச் சொல்வார்” என அந்த ரசிகர் சொல்லியிருந்தார்.
When have I ever been to tired to bowl in a England shirt pal??? https://t.co/854pfJRDXA — Ben Stokes (@benstokes38) March 31, 2021
“நான் எப்போது இங்கிலாந்து அணிக்காக விளையாடும்போது பந்து வீச அசதியாக இருக்கிறது எனச் சொல்லியுள்ளேன்?” என விமர்சித்த ரசிகருக்கே பதில் கேள்வி கேட்டுள்ளார் ஸ்டோக்ஸ்.
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை