"காஷ்மீர் பிரச்னையை தீர்த்தால் மட்டுமே அமைதி சாத்தியம்" என்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவிக்க கடந்த வாரம் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், "பாகிஸ்தானுடனான நல்லுறவை இந்தியா விரும்புகிறது. ஒரு அண்டை நாடாக இணக்கமான உறவையே பேண விரும்புகிறோம். அது நிறைவேற, நம்பிக்கையான சூழல் அமைய வேண்டும். ஆனால், அதற்குத் தீவிரவாதமும் வெறுப்பும் ஒழிக்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
மோடியின் இந்தக் கடிதத்திற்கு இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள இம்ரான் கான், ``பாகிஸ்தான் தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்த உங்கள் கடிதத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். பாகிஸ்தான் மக்களும் இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான கூட்டு உறவை விரும்புகிறார்கள்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளையும், குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் பிரச்னையையும் தீர்த்து, தெற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்ந்து நிலவச் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில், குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண ஓர் ஆக்கபூர்வமான மற்றும் முடிவு சார்ந்த உரையாடலுக்கு தகுந்த சூழலை உருவாக்குவது அவசியம். காஷ்மீர் போன்ற நிலுவையில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே அமைதி சாத்தியமாகும்" என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மக்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு தான், ``பாகிஸ்தானுடன் சுமுகமாக செல்வதன் மூலம் இந்தியா பொருளாதார ரீதியாக பயனடைகிறது. ஏனெனில், இந்திய அரசால் பாகிஸ்தான் பிரதேசத்தின் வழியாக வளங்கள் நிறைந்த மத்திய ஆசிய பிராந்தியத்தை நேரடியாக அணுக முடியும். இதில் இந்தியா முதல் படியை எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.
இந்தியா அவ்வாறு செய்யாவிட்டால், எங்களால் எதுவும் செய்ய முடியாது. மத்திய ஆசிய பிராந்தியத்திற்கு நேரடி பாதை வழியாக செல்வது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பயனளிக்கும். மத்திய ஆசியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நிறைந்துள்ளது" என்று இம்ரான் கான் கூறியிருந்தார். இதேபோல் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவும் இந்தியாவுடன் இணக்கமான சூழல் குறித்து விரிவாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ