[X] Close >

புற்றுநோய்: வலியால் துடிதுடிக்கும் அரசுப் பள்ளி மாணவி; சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு

Cancer-Government-school-student-throbbing-with-pain-Will-doctors-come-forward-to-save

திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி புற்றுநோய் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற முடியாமல் வீட்டில் வலியால் துடி துடிக்கும் காட்சி காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. மாணவியின் உயிரை காப்பாற்ற அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement

திருத்தணி நகராட்சிக்குட்பட்ட திருத்தணி - பொதட்டூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை, மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள ராஜா தேசிய நகர் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருபவர் ரம்ஜானி. இவரது கணவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டார். இவருக்கு சுபானி (24), சான்மா (17). ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில் சுபானிக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார். சான்மா மட்டும் திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

image


Advertisement

இந்நிலையில், கடந்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் சான்மாவுக்கு கால் தொடையில் வீக்கம் ஏற்பட்டதால் தாய் ரம்ஜான் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தார். பரிசோதனையில் சான்மாவுக்கு கால் தொடையில் கட்டிபோல் தெரிகிறது. நீங்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறினர். பின்னர் சான்மாவால் நடக்க முடியாமலும், உட்கார கூட முடியாமலும் போனது. இதைகண்ட தாய் என்ன செய்வது என தெரியாது, முதுகில் சான்மாவை தூக்கிக்கொண்டு சென்னை ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் சான்மாவுக்கு புற்றுநோய் (கேன்சர்) இருப்பது தெரியவந்ததும், தாய் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் மருத்துவர்கள் இதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் நீங்கள் 15 நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு வாருங்கள், அதற்குள் நானும் மற்ற அறுவை சிகிச்சை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்து அறுவை சிகிச்சை செய்யலாம் எனக் கூறி அனுப்பினர். அதைத் தொடர்ந்து மார்ச் 24 கொரோனா தொற்று அதிகமானதால் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் மாணவி சான்மா உண்ண உணவின்றி, தாயும் வேலையின்றி கடந்த 9 மாதங்களாக வீட்டிலேயே முடிங்கினர்.

image


Advertisement

இதனால் கால் தொடையில் இருந்த கட்டி பெரிதாகி வலியும் அதிகமானது. தினசரி வலியால் துடிக்கும் போதெல்லாம் தாய் என்ன செய்வது என தெரியாமல் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து விவரம் கூறினார். ஆனால் கொரோனா தொற்றால் ஊராடங்கு போடப்பட்டுள்ளதால் எங்கும் வர முடியாது என கூறிவிட்டனர் ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள். அப்படியே கடந்த 10 மாதங்கள் ஓடிய நிலையில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்ந்ததால் காஞ்சிபுரம் அண்ணா மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை என சான்மாவை முதுகில் தூங்கிக்கொண்டு மருத்துவமனை, மருத்துவமனையாக சென்று பரிசோதனை செய்தார்.

அங்கும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது, அப்படி நாங்கள் செய்தாலும் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. ஆதலால் சென்னை அரசு பொது மருத்துவனைக்கு அழைத்து சென்று அங்கு அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என பாருங்கள் எனக்கூறி அனுப்பிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து தாய், சான்மாவை சென்னை அரசு பொது மருத்துவனைக்கு சென்று மருத்துவர்களிடம் மீண்டும் காண்பித்ததில் ஆறுவை சிகிச்சை செய்வது என்பது கடினம், மேலும் கொரோனா தொற்றால் அறுவை சிகிச்சை ஏல்லாம் செய்ய முடியாது எனக்கூறி வலி குறைய ஊசியை போட்டு அனுப்பிவிட்டதாக வருத்தத்துடன் கூறுகினார் தாய் ரம்ஜானி.

இந்நிலையில், தாய் ரம்ஜானி தனது முதுகில் சான்மாவை தூக்கிக்கொண்டு 10 நாட்களுக்கு ஓரு முறை சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டு வருகிறார். இருப்பினும் பகலிலும், இரவிலும் தினந்தோறும் வலியால் துடிக்கும் தனது மகளின் நிலையை கண்டு அந்த தாய் மிகவும் சோகம் அடைந்திருக்கிறார். வலியால் துடிக்கும் போது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் சத்தத்தை கேட்டு மனம் வருந்துகின்றனர்.

image

கடந்த ஒருவருடமாக இரவு, பகல் என தூக்கம் இல்லாமல் வலியால் ஓரு பெண் குழந்தை அவதிப்படுவதை பார்க்கும் தாய்க்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என பெண்ணை பெற்ற தாய்மார்களுக்கு புரியும். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி அரசு மகளிர் மேல் நிலைபள்ளி தலைமை ஆசிரியை தெமினா கிரேனாப் மற்றும் ஆசிரியர்கள் மாணவியன் வீட்டிற்கு நேரடியாக சென்று மாணவியை பார்த்து ஆறுதல் கூறி, அரிசி, மளிகை பொருட்கள், ஓருசிறு தொகை ரொக்கம் வழங்கினர்.

எனவே தந்தயை இழுந்து, அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சான்மாவை காப்பற்ற அரசு மருத்துவனை, தனியார் மருத்துவனை மருத்துவர்கள் யாரேனும் முன்வந்து இந்த மாணவியின் உயிரை காப்பற்ற நடவடிக்கை ஏடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழக அரசாவது அரசு பள்ளி மாணவியை காப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஏதிர்பார்க்கின்றனர். மாணவியின் உயிரை காப்பாற்ற யாரேனும் முன்வருவார்களா?.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close