நாட்டில் கொரோனா பாதிப்பு மோசத்தில் இருந்து படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் மொத்த நாடுமே பெரும் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் இந்தச் சூழலில் மெத்தனம் என்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 855 ஆக இருந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் மருத்துவமனைகளும், அவசர சிகிச்சை பிரிவுகளும் தயார் செய்யப்படவேண்டும் என கூறினார்.
மாநிலங்கள் மாவட்ட வாரியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிப்பது, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை பரிசோதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி