உத்தரபிரதேச கிராமத்தில் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 15 வயது பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்புர் மாவட்டத்திலுள்ள ஓர் கிராமத்தில் 15 வயது சிறுமியை 16 வயது சிறுவன் நேற்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். இதுதெரிந்த சிறுமியின் குடும்பத்தார் சிறுவனை கண்டித்துள்ளனர். ஆனால் அதுபற்றி போலீஸாரிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த அந்த சிறுமி இன்று காலை 8 மணியளவில் தனது வீட்டிலிருந்து மண்ணெண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார். சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கான்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.
சிறுமியின் பெற்றோர் ஹமிர்புர் சூப்பரண்ட் நரேந்திர குமார் சிங்கிடம் இதுகுறித்து புகார் கொடுத்தனர். அந்த புகாரில் இதற்கு முன்பே அந்த சிறுவன் தங்கள் மகளிடம் பலமுறை தவறாக நடந்துகொண்டதாகவும், இந்தமுறை அந்த சிறுவனை தாங்கள் கண்டித்ததாகவும் கூறியிருக்கின்றனர். மேலும் இதனால் மனமுடைந்த சிறுமி தீவைத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ள போலீஸார், அதை மாஜிஸ்திரேட் முன்பு சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி