தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
செல்வராகவன் – தனுஷ் கூட்டணி "மயக்கம் என்ன" படத்திற்கு அடுத்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ’நானே வருவேன்’ படத்தில் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில், கடந்த புத்தாண்டு அன்று ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் தனுஷுடன் செல்வராகவன் இணையும் கலைப்புலி தாணு தயாரிப்பில் ’நானே வருவேன்’ படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
தற்போது படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார் செல்வராகவன். தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்த அளவிற்கு முன் தயாரிப்பில் நான் எந்தப் படத்திற்கும் ஒருபோதும் பணியாற்றவில்லை. நானே வருவேன் படப்பிடிப்புக்கு தயாராகிறது’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது அமெரிக்காவில் ’தி கிரே மேன்’ ஹாலிவுட் பட ஷூட்டிங்கில் இருக்கும் தனுஷ் இந்தியா திரும்பியவுடன் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ