அஜித்தின் ’வலிமை’ படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் நிறுவனங்கள் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித்,ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளது. அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘வலிமை’ அப்டேட் கேட்டுவந்த நிலையில் அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் சமீபத்தில் அறிவித்திருந்தார் போனி கபூர்.
இந்நிலையில், மீண்டும் ஒரு அப்டேடை கொடுத்து அஜித் ரசிகர்களை உற்சாகமாக்கியிருக்கிறார். ‘வலிமை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியதாக அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தோடு வலிமை படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்