தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வருமான வரித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் சோதனை நடைபெறுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரம்காட்டி வருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சிகள் அதிர்ச்சியடையும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளன. பணம் பறிமுதல் செய்யப்படுவது ஒருபுறம் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தங்களது பணிகள் முடக்கப்படுவதாக அரசியல் பிரமுகர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான புவனேஸ்வரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் புவனேஸ்வரன் இல்லம் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி