[X] Close >

இந்தியா வெற்றிபெற வேண்டுமா... நடராஜனை கூப்பிடுங்கப்பா! - முழங்கும் நெட்டிசன்கள்

Want-to-win--Please-call-Natarajan-

இந்தியா வெற்றி பெற வேண்டுமா? நடராஜனை கூப்பிடுங்கப்பா. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வென்ற பின், நெட்டிசன்களின் முழக்கம் இதுதான். ஏன்? விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்..


Advertisement

சேலம் சின்னப்பம்பட்டி நடராஜன். இந்த பெயரை உச்சரிக்காத தமிழக கிரிக்கெட் ரசிகர்களே இல்லை எனலாம்.

நடராஜன் இந்திய அணிக்குள் நுழைந்ததே ஒரு சுவாரசியம்தான். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடராஜன், ஆஸ்திரேலிய தொடரில், நெட் பவுலராக தேர்வானார். வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்ட நிலையில் முதலில், டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். நவ்தீப் சைனிக்கு காயமேற்பட்ட நிலையில், கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் வண்ண சீருடையுடன் முதலில் களம் இறங்கிய நடராஜன் 2 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி தேடி தந்தார். அதற்கு முன் நடைபெற்ற இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்திருந்தது. அடுத்த டி20 தொடர்களில் 6 விக்கெட்களை வீழ்த்தி, இந்தியா தொடரை வெல்ல உதவினார்.


Advertisement

image

அடுத்து டெஸ்ட் போட்டிகள் தொடங்கிய நிலையில், முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து காயம்பட, ஆஸ்திரேலியாவிலேயே தங்கவைக்கப்பட்டார் நடராஜன். முக்கியமான கடைசி டெஸ்ட் போட்டியில், அறிமுகமான நடராஜன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை, ஆஸ்திரேலிய மண்ணில் 2-வது முறையாக வென்று சாதனைப் படைத்தது.

இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நடஜாரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும் அவர் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. 3 ஒரு நாள் போட்டி தொடரில், கடைசி போட்டியில் களம் இறக்கப்பட்டார் நடராஜன். தொடர் 1க்கு1 என சமநிலையில் இருந்த நிலையில், கடைசி போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை கைப்பற்றியது.


Advertisement

குறிப்பாக கடைசி ஓவரில் 14 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், கச்சிதமாக பந்துவீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார் நடராஜன். 10 ஓவர்களில் நடராஜன் 73 ரன்கள் கொடுத்தாலும், கடைசி ஓவரை கனகச்சிதமாக அவர் வீசியதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர். வெற்றி தேவையா. நடராஜனை கூப்பிடு என பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close