இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘பபூன்’ படத்தின் புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது.
தமிழின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் படங்களை தயாரித்தும் வருகிறார். தனுஷ் நடிப்பில் தற்போது ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி முடித்துள்ளவர், அடுத்ததாக விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்டோருடன் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், தற்போது தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘பபூன்’ படத்தை தயாரித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஹிட் அடித்த ‘மேயாத மான்’ படத்திற்குப் பிறகு வைபவ் ஹீரோவாக மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குநர் கெளதம் மேனன், வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்ளிட்ட இயக்குநர்கள் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தை திரையில் காணும் பேராவலை உண்டு பண்ணுகிறது என்று கருத்திட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
ஏற்கெனவே, தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம் ’மெர்குரி’, ’மேயாத மான்’, ’பென்குயின்’ உள்ளிட்ட படங்களை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்