[X] Close >

“ஸ்மார்ட்டாக பந்து வீசி இங்கிலாந்துக்கு இம்சை கொடுப்போம்!” - ஆட்டத்திற்கு பிறகு ஹர்திக்

We-have-to-bowl-just-smart-in-the-second-innings-says-Indian-All-rounder-Hardik-Pandya-in-the-third-and-final-ODI-against-England

இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸில் சமத்தாக பந்து வீசி இங்கிலாந்து அணிக்கு இம்சை கொடுப்போம். அதன் மூலம் எங்களது வெற்றி வாய்ப்பை தக்க வைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். ஆட்டத்திற்கு பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக இந்த ஆட்டத்தில் அவர் 64 ரன்களை குவித்தார். 


Advertisement

“நானும், பண்டும் கூடுதலாக கொஞ்ச நேரம் களத்தில் நின்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நிச்சயம் இன்னும் சற்று கூடுதலான ரன்களை போர்டில் டிக் செய்திருப்போம். தவறான நேரத்தில் விக்கெட்டை இழந்து விட்டோம். இருந்தாலும் நெருக்கடியான சமயத்தில் அணியின் கூட்டு முயற்சியால் வெற்றியை பலமுறை சாத்தியப்படுத்தி உள்ளோம். அதே போல இந்த போட்டியிலும் முயற்சிப்போம். 

ஸ்மார்ட்டாக பந்து வீசி இங்கிலாந்துக்கு இம்சை கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என பாண்ட்யா தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெற 330 ரன்கள் குவித்தாக வேண்டும்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close