இத்தனை குறைபாடுகளுடன் இருந்தாலும், சுயமுன்னேற்ற பேச்சாளராக மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார் கிளாடியோ வியர்ரா டி ஒலியர்ரா.
பிரேசில் நாட்டில் மான்டி சான்டோ நகரை சேர்ந்தவர் கிளாடியோ வியர்ரா டி ஒலியர்ரா. இவருக்கு, பிறக்கும் போதே கழுத்து பின்னோக்கி வளைந்து, தலை முற்றிலும் திரும்பிய நிலையில் இருந்தது. கால்கள் மோசமாக வளைந்த நிலையில் இருந்தன. அவரது கைகளும் நெளிந்து பலமற்று இருந்தன. ஆர்த்ரோகிரிபோசிஸ் மல்டிபிளக்ஸ் என்றும் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்தபோது, இந்த குழந்தை 24 மணி நேரம் உயிருடன் இருப்பதே அதிசயம் என்று மருத்துவர்கள் கூறினர்.
ஆனால், மருத்துவர்களின் கூற்றைப் பொய்யாக்கி, பலருக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில், கிளாடியோ வியர்ரா டி ஒலியர்ரா 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
உடலில் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் வணிகவியல் துறையில் பல்கலைக்கழக பட்டம் பெற்றார் கிளாடியோ. இதுதொடர்பாக கிளாடியோ கூறும் போது, ''சிறுவயதில் இருந்தே என்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வேன். மற்றவர்களை சார்ந்திருக்க எப்போதும் விரும்பியதில்லை. டிவி, கம்ப்யூட்டரை ஆன் செய்ய, செல்போனை எடுக்க பயிற்சிகள் மேற்கொண்டேன். நானும் மற்றவர்களை போல சாதாரண மனிதன்தான். தங்கள் நாட்டுக்கு வந்து பேசுமாறு எனக்கு ஏராளமான அழைப்புகள் வருகின்றன. அங்கு சென்று பேசி வருகிறேன். மிக விரைவில் உலகம் முழுவதும் பயணித்து சுயமுன்னேற்ற உரையாற்ற இருக்கிறேன்'‘ என்கிறார் நம்பிக்கையுடன். .
Loading More post
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ