[X] Close >

”குருப் சுகுமாரா குருப் ” - 20 லட்சம் பார்வையாளர்களை கடந்த துல்கர் சல்மான் 'குருப்' டீஸர்

Dulquer-Salmaan-s-Kurup-teaser-is-full-of-intrigue

துல்கர் சல்மான் நடித்து தயாரித்திருக்கும் குருப் படத்தின் டீஸர் யூடியூப்பில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.


Advertisement

கேரள பிரபல குற்றவாளி சுகுமாரா குருப் வாழ்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் குருப். துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள இந்தப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். 

image


Advertisement

இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த் இணைந்து
எழுதியுள்ளனர். சுஷின் ஸ்யாம் இசையமைத்துள்ளார்.

அடர்ந்த காட்டினுள் கார் ஒன்று எரியும் காட்சியில் ஆரம்பிக்கும் டீஸர், குருப்பாக வரும் துல்கரை கண்டடைய காவல்துறை எடுக்கும் முயற்சிகளை காட்சிப்படுத்துகிறது. “36 வருடமா 300க்கும் அதிகமான துப்புகள், ஆயிரத்திற்கும் அதிகமான பயணங்கள் இது எல்லாம் ஒரே ஒரு ஆளுக்காக.....என ஒலிக்கும் பின்னணியில் துல்கர் சல்மான் என்ட்ரி ஆகிறார். அதனைத்தொடர்ந்து வரும் மூதாட்டி அவரின் பெயர் என்ன என கேட்க குருப்.. சுகுமாரா குருப் என பதில் கொடுக்கிறார் துல்கர் சல்மான்.. இந்த டீஸர் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close