[X] Close >

‘இது கிரிக்கெட்டுக்கு புதுசு!’ - மீண்டும் சர்ச்சையான அம்பயரின் முடிவு!

This-was-new-to-Cricket-Fans-criticize-on-Indian-Team--Rishabh-Pant-DRS-Review-not-out-against-England-Second-ODI

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் அம்பயரின் முடிவால் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியா பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 40வது ஓவரின் கடைசி பந்து சர்ச்சையாகி உள்ளது. 


Advertisement

இங்கிலாந்து பவுலர் டாம் கரண் வீசிய அந்த பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த பன்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று அதை மிஸ் செய்தார் ரிஷப் பண்ட். அதனால் பந்து அவரது பேடில் பட்டது. அதற்கு இங்கிலாந்து அப்பீல் செய்ய, அவுட் கொடுத்தார் அம்பயர். இருந்தாலும் அந்த பந்து பவுண்டரி லைனை கடந்தது. உடனடியாக பன்ட் DRS ரிவ்யு செய்தார். அதில் பந்து பேட்டில் பாட்டு எட்ஜ் ஆனது போல இருந்தது. மேலும் பந்து லெக் ஸ்டம்பை தாக்கவில்லை எனவும் தெரிந்தது. உடனடியாக பன்ட் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இருந்தாலும் கள அம்பயர் அவுட் என சொன்னதால் அந்த பந்துக்கு ரன் எதுவும் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் அது டெட் பால் என சொல்லப்பட்டது.


Advertisement

இந்நிலையில் ரசிகர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். "இது கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் புதிது. அம்பயரின் முடிவு பின் வாங்கப்பட்டது என்றால் பவுண்டரி கொடுத்திருக்க வேண்டும். பந்து டெட் என்றால் மீண்டும் வீசி இருக்க வேண்டும். இது உலக கோப்பை மாதிரியான மிகமுக்கிய போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என விஷால் என்ற ரசிகர் ஒருவர் சொல்லியுள்ளார். 


Advertisement

இங்கிலாந்து வெற்றி பெற 337 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close