[X] Close >

கே.எல்.ராகுல் சதம்; ரிஷப் 40 பந்துகளில் 77 ரன் விளாசல் - 336 ரன்கள் குவித்த இந்திய அணி

England-Needed-337-runs-to-win-the-second-ODI-Against-India

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.


Advertisement

புனேவில் நடைபெற்று வரும் இரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் ஷிகர் தவான், மற்றும் ரோகித் ஷர்மா ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவுட்டான போதும் கே.எல்.ராகுல், கேப்டன் விராட் கோலி மற்றும் ரிஷப் பன்டின் ஆட்டம் இந்தியாவுக்கு கைகொடுத்தது. 

விராட் கோலி மற்றும் ரிஷப் பன்டுடன் 100 ரன்களுக்கு மேல் கே.எல்.ராகுல் அடுத்தடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். ரிஷப் சிக்ஸர் மழை பொழிந்தார். இறுதி ஓவர்களில் இறங்கிய ஹர்திக் பாண்ட்யாவும் 16 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். 


Advertisement

அதன் மூலம் 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இறுதியில் இந்தியா 336 ரன்களை குவித்தது. தொடர்ந்து இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 337 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 77 ரன்கள் விளாசி இருந்தார். கே.எல்.ராகுல் 114 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் டாப்லே, டாம் கர்ரன் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close