கும்மிடிப்பூண்டி அருகே புகார் மீது வழக்கு பதியாமல் இருக்க கட்டட கட்டுமான ஒப்பந்ததாரரிடம் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். கட்டட கட்டுமான ஒப்பந்ததாரரான இவருக்கும், பெருவாயல் கிராமத்தை சேர்ந்த காந்திமதி என்பவருக்கும் வீடு கட்டியதற்காக பணம் கொடுக்கல் - வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கவரப்பேட்டை காவல் நிலையத்தில் காந்திமதி, ஜெகதீசன் மீது புகார் அளித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சிவராஜ், புகார் மீது வழக்கு பதியாமல் இருக்க தனக்கு ரூ.20,000 லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டதாக கூறி, திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார் ஜெகதீசன்.
இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை ஜெகதீசன், உதவி ஆய்வாளர் சிவராஜிடம் ஆரணி பகுதியில் வழங்கினார். அப்போது. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், காவல் உதவி ஆய்வாளர் சிவராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ