[X] Close >

“நான் 2024 அதிபர் தேர்தலிலும் போட்டியிட விரும்புகிறேன்!” - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

American-President-Joe-Biden-says-he-has-plan-to-run-2024-Presidential-election-on-his-first-Press-Brief-Meet

வரும் 2024-இல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலிலும் போட்டியிட விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அதிபர் பைடனின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் பைடன் அதிபராக பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

“எதிர்வரும் 2024 அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவதுதான் எனது திட்டம். அது தான் எனது எதிர்பார்ப்பும் கூட. இருந்தாலும் நான் விதியை நம்புபவன். அதனால் அடுத்த நான்கரை ஆண்டு அல்லது மூன்றரை ஆண்டுக்கென ஒரு பிரத்யேக திட்டத்தை நான் மேற்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார் 78 வயதான பைடன். 

image


Advertisement

அவர் அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னதாகவே 2024 தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற விவாதம் எழுந்திருந்தது. வழக்கமாக முதல் முறையாக அமெரிக்க அதிபராக தேர்வானவர்கள் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவர். ஆனால் பைடன் விஷயத்தில் அவரது வயது விவாத பொருளாக பார்க்கப்படுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close