இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பகல் இரவு ஆட்டமாக புனேவில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயஸ் ஐயர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மாற்றாக அணியில் இடம் பெற போவது யார் என்ற விவாதம் எழுந்துள்ளது. இளம் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் சூரியகுமார் யாதவ் என இருவரில் ஒருவர் இன்றைய ஆட்டத்தில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன. சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்தால் அது இந்திய அணிக்காக அவர் விளையாடும் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாக அமையும்.
அதேபோல குல்தீப் யாதவிற்கு மாற்றாக சஹால் ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த இரண்டு மாற்றங்களை தவிர இந்திய அணியில் ஆடும் லெவனில் கடந்த போட்டியுடன் ஒப்பிடும்போது எந்த மாற்றமும் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Who should get a chance in India's XI today in place of Shreyas Iyer?
Pant or Suryakumar Yadav? #INDvsEND pic.twitter.com/BQt6AVoYKg — CricXtasy (@CricXtasy) March 26, 2021
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளாதல் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல கோலி அண்ட் கோ முயற்சிக்கும். இங்கிலாந்து அணியிலும் மிடில் ஆர்டரில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் அந்த அணிக்கு நல்லதொரு தொடக்கம் கிடைத்த போதும் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது. காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தொடரிலிருந்து விலகியுள்ளார். அதே போல சாம் பில்லிங்ஸும் இன்றைய போட்டியில் ஆட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்